விஜய்யின் புகழ் டிரைலர் குறித்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்னால்ட் கருத்து தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில் நயன்தாரா விவேக் கதிர் டேனியல் பாலாஜி உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீசாகிறது இப்படத்தின் டிரைலர் கடந்த 12ஆம் தேதி வெளியானது இந்த டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டியது.
இரண்டு கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 592 பேர் ட்ரெய்லரை கண்டு ரசித்துள்ளனர். விஜய் என்றாலே வைரல் தான் அதுவும் விஜய் நடித்த படத்தின் ட்ரெய்லர் என்றால் சும்மா விடுவார்களா அவரது ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெய்லரை வைரலாக ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா துறையினரின் பாராட்டையும் தாண்டி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் திகில் திரைப்படத்தை வாழ்த்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அர்னால்டு விஜய் பற்றி அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பிகிலா மாமா எனக்கு தளபதி விஜய் படங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி டிரைலரை ஒழுக்க ரசித்தேன் ராயப்பன் கதாபாத்திரம் இருக்கிறது. அது மாஸ் அவதாரம் யாராவது எனக்கு இரண்டு டிக்கெட்டுகள் கொடுங்கள் நண்பா என்று குறிப்பிட்டு உற்சாகமாகி உள்ளார்.
அர்னால்டுக்கு தமிழ் நன்றாக தெரியும் இலங்கை அணி முதன்முதலாக டி20 பங்கேற்றபோது இவர் அணியில் இருந்தார். மேலும் இவர் 2007 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். தமிழில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக இருந்தவர் ஏகப்பட்ட தகவல்களை இவர் தமிழில் ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.