மலேசியாவில் உணவின்றி சிக்கி தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்

மலேசியாவில் வேலைக்கு சென்று உணவின்றி சிக்கி தவிக்கும் தமிழக தொழிலாளர்கள் 2 பேர் தங்களை மீட்க கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த ஐசக் மற்றும் அவரது மனைவி கிரிஜா ஆகியோர் சேர்ந்து ஜி ஆர் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனில் தனிஷ் ராஜேஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் தலா ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு அவர்களை மலேசியாவில் வெல்டர் பணிக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

 

அங்கு இந்த நான்கு பேரும் ஏஜெண்டுகள் இடம் விற்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து வேலையும் இல்லாமல் உணவும் இல்லாமல் நான்கு பேரும் தவித்து வந்துள்ளனர். இதனை அடுத்து தனுஷ் ராஜேஷ் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பித்து சொந்த ஊருக்கு வந்த நிலையில் மலேசியாவிலுள்ள பிரகாஷ் ஆகியோர் தங்களை மீட்க கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


Leave a Reply