சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்தை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்சென்னை மாவட்ட இளைஞரணி காங்கிரஸார் கோடம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 40-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் எதிர்ப்பை மீறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


Leave a Reply