தோசைமாவில் தூக்க மாத்திரை! கணவர் கொலை

சென்னை அடுத்த புழலில் கணவனுக்கு தோசை மாவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். புழல் நகரைச் சேர்ந்த சுரேஷ் அதே பகுதியில் இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சுரேஷ் அனுசியா தம்பதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் திங்களன்று காலை வீட்டின் முன் சுரேஷ் இறந்து கிடந்ததாக மனைவி அனுசியா புழல் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

 

இதையடுத்து சுரேஷின் உடலை கைப்பற்றிய காவல்துறை உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது ஆனால் கழுத்தில் காயம் இருந்ததால் கழுத்தை நெரித்து கொள்ள இன்று இருக்கலாம் என்றும் உடற்கூறு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் மனைவியான சிவாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தின.ர் அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த விசாரணையை தீவிரப்படுத்தி எப்போது கணவர் சுரேசை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்ததோடு தன்னை அடித்து துன்புறுத்தியதால் சுரேசை கொலை செய்ததாகவும் உறவினர் முரசொலிமாறன் என்பவரின் உதவியுடன் கணவருக்கு தோசையில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாகவும் அனுசியா கூறியுள்ளார்.

 

ஆழ்ந்த தூக்கத்தில் மயங்கிய கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து தாக்கவும் இதற்கும் உறவினராக கூறியுள்ளார். இதையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply