பட்டாசு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

பட்டாசு விளக்குகளை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்று பல்வேறு பொதுநல அமைப்புகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பசுமை பட்டாசுகளை மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாடுகளை கடந்த ஆண்டு விதித்திருந்தது.

 

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தீபாவளி நெருங்குவதால் அவற்றை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அயோத்தி வழக்கில் விசாரணையில் இருப்பதால் தங்களது வழக்கு விசாரணையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது.

 

அதற்கு பட்டாசு வழக்கை விசாரிக்கும் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்றும் விரைந்து விசாரிக்க சொல்ல முடியாது என்றும் நீதிபதி ராமநாம மறுப்பு தெரிவித்தார். நாளையுடன் அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த வாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply