பாகிஸ்தான் சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி மறைந்த இளவரசி டயானாவின் பாணியில் ஆடைகளை அணிந்து உள்ளார் 5 நாள் சுற்றுப்பயணமாக பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி பாகிஸ்தான் சென்றுள்ளனர். இஸ்லாமாபாத் விமானத்தில் இருந்து இறங்கிய போது அவர் இளம் நீல நிற சல்வார் ஆடை அணிந்திருந்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு தனது மாமியாரும் மறைந்த இளவரசியான டயானா பாகிஸ்தானுக்கு சென்றபோது இதேபோன்று ஆடை தான் அணிந்திருந்தார். ஆடையை தேர்வு செய்வதில் மாமியாரை பின்பற்றும் மருமகள் என்று இருவரின் புகைப்படங்களை ஒப்பிட்டு விடப்பட்டு வருகிறது.