ஜியோவில் இனி இலவச அழைப்பு கிடையாது

ரிலையன்ஸ் ஜியோ வில் இருந்து இதர தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளையும் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த கட்டணத்திற்கு இணையாக டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

ஜியோ வில் இருந்து மற்றொரு ஜியோ எண்ணிற்கு லேண்ட்லைன் போன் செய்தால் கட்டணம் கிடையாது. அதேபோல வாட்ஸ்அப்பில் செய்யப்படும் கால்களுக்கு கட்டணம் கிடையாது வழக்கம்போல மற்றும் நெட்வொர்க்கில் இருந்து வரும் கால்கள் இலவசம் தான் கடந்த மூன்று ஆண்டுகளில் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பயன்பாட்டு கட்டணமாக 13,500 கோடி ரூபாய் செலுத்திய நிலையில் ஜியோ நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.


Leave a Reply