49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை முடித்துகொள்ள பீகார் போலீஸ் முடிவு

இயக்குனர் மணிரத்னம் நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேசவிரோத வழக்கை முடித்துக் கொள்ள பீகார் போலீசார் முடிவு செய்து உள்ளனர். திரைப்பட இயக்குனர்கள் மணிரத்னம் ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். காவலர்கள் என்ற பெயரில் கும்பல் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து வேதனை தெரிவித்து இந்த கடிதத்தில் 49 பேரும் கருத்துக்களை கூறி இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில் பீகாரை சேர்ந்த உஷா என்ற வழக்கறிஞர் இவ்வாறு கடிதம் எழுதி அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் முசாபர் நகரில் உள்ள காவல் நிலையத்தில் 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இதற்கு நாடெங்கிலும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தன இந்நிலையில் இந்த வழக்கை முடித்துக் கொள்ள சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கை முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். தவறான குற்றச்சாட்டை எழுப்பிய வழக்கறிஞர் ரோஜா மீது நடவடிக்கை எடுக்கவும் சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply