உணவகத்தில் புகுந்து பரோட்டா மாவை சாப்பிட்ட யானை

கூடலூர் பகுதியில் உள்ள உணவகத்தில் புகுந்த காட்டு யானை அங்கு உள்ள பரோட்டாவை சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் கூடலூரை அடுத்த பகுதியில் உள்ள பாகம் ஒரு உணவகம் ஒன்றில் காட்டு யானை புகுந்துள்ளது .அப்போது உணவக சமையல் அறையில் புகுந்து அந்த யானை அங்கு பரோட்டா செய்வதற்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த மைதா மாவை சாப்பிடத் தொடங்கியது. அங்கிருந்த ஊழியர்கள் பதிவு செய்த காணொளி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Leave a Reply