மலைச்சாலையை அகலப்படுத்தும் பணியின் போது மண் சரிவு

தேனி மாவட்டம் மூணாறு போடிமெட்டு இடையே மலைச்சாலையில் அகலப்படுத்தும் பணியில் ஈடுபடும் போது மண்சரிவில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார். இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மாயமான மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு போடிமெட்டு இடையே மலை சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிவு ஏற்பட்டு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி ஆகியவை அடித்து செல்லப்பட்டன.

 

இதில் டிப்பர் லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரியை சேர்ந்த கலையரசன் என்பவர் மாயமான நிலையில் ஜேசிபி ஓட்டுநரான திண்டுக்கல்லைச் சேர்ந்த உதயா என்பவரின் சடலம் மீட்கப்பட்டது. மேலும் பணியில் இருந்த வத்தலகுண்டு போய் சேர்ந்த பால்ராஜ் பட்டாபி சேர்ந்த ஒருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply