சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் சிறையில் போலீசார் சோதனை
சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடுத்த பரப்பன அக்ரஹார சிறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா அவரது அண்ணன் மனைவி இளவரசி, அக்கா மகன் சுதாகரன் ஆகியோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா மது பாட்டில்கள் செல்போன்கள் போன்ற வசதிகள் சாதாரணமாக கிடைப்பதாகவும் மாநகர குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 5 மணி முதல் பரப்பன அக்ரஹாரா சிறையில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் கஞ்சா பொட்டலங்கள் 37 கத்திகள், நூற்றுக்கணக்கான மொபைல் போன்கள், சிம் கார்டுகள் ஆகவே சிக்கின. சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




