ஆயுத பூஜையை ஒட்டி சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காய்கள் இரவோடு இரவாக இளைஞர் குழு ஒன்று அகற்றியது. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் ஆயுதபூஜை தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் இயந்திரங்கள் வாகனங்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வதும் பூஜையை தொடர்ந்து திருஷ்டி பூசணிக்காயை உடைப்பது வழக்கம்.
சாலையில் உடைக்கப்படும் பூசணிக்காய்கள் சிக்கி வாகனங்கள் விபத்தை தடுத்த அதனை உடனே அகற்ற வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளன.ர் எனினும் சேலம் மாநகர் முழுவதும் சாலைகளில் அதற்கான கிடந்த பூசணிக்காய்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. இந்நிலையில் சேவகன் அமைப்பை சேர்ந்த சேலம் பகுதி இளைஞர்கள் சாலையில் கிடந்த பூசணிக்காயை அகற்றும் பணியில் உத்வேகத்துடன் ஈடுபட்டனர்.
மாலை 6 மணிக்குத் துவங்கிய இந்த பணி இரவு 12 மணி வரை நீடித்தது சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் கடந்த பூசணி காய்களை முகம் சுளிக்காமல் பற்றி விபத்துகளை தவிர்த்தனர்.