கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவால் தமிழகத்திற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறு அடுத்துள்ள அப்பகுதியில் உள்ள கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திடீரென மண்சரிவு ஏற்பட்ட தால் சாலை போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது மண்சரிவில் லாரி மற்றும் ஜேசிபி வாகனம் ஆகியவை சிக்கியதாக சொல்லப்படுகிறது. மீட்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தை நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கேரளம் தமிழகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.