ரஷ்யாவில் மனைவி விவாகரத்து விண்ணப்பித்தால் மனமுடைந்த கணவன் இரண்டு குழந்தைகளோடு ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து உயிர் இழந்தார். ரோமன் என்பவர் ஜெரினா என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். ரயில்வேயில் வேலை பார்த்து வந்த ரோமன் தனது மனைவிக்கு வேறு ஒரு காதல் இருக்கக்கூடும் என சந்தேகித்து வந்தார்.
இதனால் அவரது மனைவி ஜெரினா விவாகரத்திற்கு விண்ணப்பிக்க போவதாக கூறிவிட்டு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சென்றார். விவாகரத்திற்கு விண்ணப்பித்து விட்டதை அறிந்த ரோமன் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு பால்கனியில் நின்று குதிக்க தயாராகும் அதுபோல புகைப்படம் எடுத்த மனைவிக்கு அனுப்பினார். பதறியடித்து வாடகை கார் மூலம் குடியிருப்புக்கு வந்து பார்ப்பதற்குள் ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே குதித்து ஒன்றரை வயது குழந்தையுடன் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி அந்த சிறுமியும் உயிரிழந்தார் இருவருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டதற்கான அறிகுறி இல்லை என அக்கம்பக்கத்தினரும் குடும்பத்தினரும் கூறிய நிலையில் பணி அனைத்தும் தன் மனைவியின் தோள்மீது என ரோமன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.