அரசியலுக்கு ரஜினிகாந்த் வரவேண்டாம் – அமிதாப் பச்சன் அட்வைஸ்

அரசியலுக்கு வர வேண்டாம் என ரஜினிகாந்திற்கு அறிவுரை கூறியதாக ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அமிதாப்பச்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில் சிரஞ்சீவி அரசியலுக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்திய தாகவும் ஆனால் அதனை சிரஞ்சீவி கேட்கவில்லை என்றால் அரசியலில் ஈடுபட்ட போது கிடைத்த கசப்பான அனுபவங்களின் மூலமே பிறருக்கு அறிவுரை கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேபோல ரஜினிகாந்த் இடமும் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளதாக அவர் கூறினார் .தமது அறிவுரையை ஏற்பது புறக்கணிப்பதும் ரஜினியின் கையில் உள்ளதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply