கல்லூரி விடுதியில் சென்னை மாணவர் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதியில் சென்னையை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனியார் பல்கலைக்கழகத்தில் சென்னை கேகே நகரை சேர்ந்த நாராயணன் என்பவருடைய மகன் ரகுவரன் படித்தவன் தான் நேற்று கல்லூரி முடிந்து விடுதிக்கு திரும்பிய அவர் வெகுநேரமாகியும் அறையின் கதவை திறக்கவில்லை என தெரிகிறது.

 

இதனால் சக மாணவர்கள் அறையை திறந்து பார்த்தபோது ரகுவரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரகுவரனின் பெற்றோர் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரகுவரனின் உடலை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Leave a Reply