சிறை தண்டனை காலம் முடிந்து சசிகலா வந்தாலும் அதிமுகவில் ஒருநாளும் புக முடியாது என்று அக் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவின் கவிதை வடிவ கட்டுரை வெளியாகியுள்ளது. சத்தியத்துக்கு ஓட்டையும் சாத்தான் கண்ணோட்டமும் என்ற தலைப்பில் சித்திரகுப்தன் என்பவர் எழுதியதாக நமது அம்மா நாளேட்டில் கவிதை வெளியாகியுள்ளது.
உள்ளே இருப்பவர் வெளியே வந்து ஒன்றரை கோடி தொண்டர்கள் இயக்கத்தை தனதாக்கிக் கொள்வார் என சிலர் புரளி கிளப்பி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. சசிகலா வந்தது முதல்வராக டிடிவிதினகரன் காணும் கனவு பலிக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் புனிதத்தில் விஷமாக கலந்து மண்ணுளிப் பாம்பாக மறைந்திருந்து அதிமுகவை கரையானை அழித்தவர்கள் மீண்டும் ஒருபோதும் போக முடியாது என்று நமது அம்மா நாளேட்டில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
தொண்டர்கள் கூடியும் இபிஎஸ் ஓபிஎஸ் இணை கரமாக நடத்தும் அதிமுக என்ற சத்தியத்தின் கோட்டையில் சாத்தான்கள் ஒருபோதும் சமரசமாக முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.