--- --:--:-- --

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு

_108377982_pchidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப சிதம்பரம் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ப சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது கடந்த 2007ம் ஆண்டு மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.இதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

 

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்திருந்தது. நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகி சிதம்பரம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon