கைவரிசை காட்டியவர்கள் வடமாநிலத்தவர்கள் என போலீஸ் உறுதி

திருச்சி லலிதா ஜுவல்லரி கடையில் சுவற்றில் துளையிட்டு கொள்ளையடித்தது வடமாநில கொள்ளையர்கள் தான் என்பது காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. லலிதா ஜுவல்லரி கோல் பொம்மை முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் விசாரணை மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நாட்களில் கொள்ளையர்களை கைது செய்துவிடுவோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply