பாதாம் பால் குடித்துக் கொண்டே பெட்டிக்கடையில் 2 பேர் கைவரிசை
மதுரை அருகே பாதாம் பால் குடித்துக்கொண்டே பெட்டி கடை ஒன்றில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பூதியார் கொண்டு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ராமர். கடந்த 20 ஆம் தேதி நள்ளிரவு இவரது கடையின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் இரண்டு பேர் உள்ளே புகுந்துள்ளனர்.
இதையடுத்து கடையில் இருந்த பாதாம் பாலை குடித்துக்கொண்டே 25 நிமிடங்களாக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த காட்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதையடுத்து கடையில் இருந்த 3 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கேஸ் அடுப்பு, பிஸ்கட் பண்டல்கள், ஹார்லிக்ஸ் பாட்டில்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.
கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து ரகுவை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள கண்ணனை தீவிரமாக தேடிவருகின்றனர்.இவர்கள் இருவர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




