திண்டுக்கல்லில் தனியார் விடுதியில் தங்கியிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பாம்பு கடித்ததில் உயிரிழந்திருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று திண்டுக்கல்லில் பரவலாக மழை பெய்தது. அதன்காரணமாக பள்ளியின் விடுதியில் ஒரு நல்ல பாம்பு ஒன்று மாணவிகள் தங்கியிருந்த அறையில் மறைந்திருக்கிறது.
கொடைக்கானலை சேர்ந்த ராமர் என்பவருடைய மகள் வர்ஷா வயது 14. இந்த மாணவி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நள்ளிரவில் அந்த மாணவி பீரோவில் போட்டு தூங்கிக் கொண்டிருந்த போது ஏதோ ஒன்று பூச்சி கடித்தது போல் எழுந்து நின்று அழுது கொண்டிருந்திருக்கிறார். அப்போது சக மாணவிகள் என்னவென்று கேட்ட போது அந்தப் பெண்ணின் காலில் பூச்சி கடித்த ஒரு காயம் ஏற்பட்டிருந்தது.
இதனை கண்ட மாணவிகள் அங்கிருந்த வார்டனை கூப்பிட்டனர். எலி கடித்தது போல் தெரிந்ததாக வார்டனிடம் மாணவி கூறியிருக்கிறார். அந்த மாணவி உடனே அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு பார்த்தபோது மாணவி பாம்பு கடித்தது தெரிய வந்துள்ளது. மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.