வாக்காளர் விபரங்களை மொபைல் ஆப் மூலமாகவும் சரிபார்க்கலாம்!

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களது தகவல்களை சரிபார்க்க பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதில் உங்களது (வாக்காளர்) விபரங்களை மொபைல் ஆப் மூலமாகவும் சரிபார்க்கலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…

 

*Google Play Store-ல் சென்று Voter Help Line என்ற மொபைல் செயலியினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் இடதுபுறம் கீழ்பகுதியில் “EVP” என்ற வட்டம் இருக்கும் அதன் உள் சென்று உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்யவும். அதில் உங்களது (வாக்காளர்) விபரம் வரும். மேலும், உங்களது அலைபேசி எண்ணை உள்ளீடு செய்து அவற்றில் உள்ள விபரங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டுமெனில் (✏) என்ற இடத்தினை தேர்வு செய்து திருத்தம் செய்யலாம். பின்னர் உறுதி செய்து விட்டு தங்களது குடும்பத்தினர் (Family Tree போன்று) விபரங்களையும் ஒருங்கே பதிவுகளை சரிபார்க்கலாம்.

 

இறுதியாக உங்களது வாக்குச்சாவடி பற்றிய விபரம் பூர்த்தி செய்து சம்ர்ப்பிக்கவும். முடிவுற்றவுடன் கடைசியாக கீழே உங்களது பதிவு செய்யமைக்காக (Download Certificate) தேர்தல் ஆணையத்தால் சான்று வழங்கப்படும்.


Leave a Reply