இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 1.5 லட்சம் கொள்ளை!

மதுரை மாவட்டம் மேலூரில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரை தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளவர் செல்வராஜ். இவர் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரியாக இருந்து வந்தார். இந்நிலையில் மேலூரில் உள்ள வங்கியில் ஒன்றரை லட்சத்தை தனது குடும்ப நிகழ்ச்சிக்காக மதியம் எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் மஞ்ச பையில் வைத்துக்கொண்டு அவர் அழகர்கோவில் சாலையில் உள்ள நகைக்கடை பஜாரில் வந்துள்ளார்.

 

அங்கு தனது உறவினர் நகை கடை முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பேசிக் கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் 25 வயது மதிக்கத்தக்க அவர்கள் அவரை நோட்டமிட்டு வந்துள்ளனர். அவர் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று அதை கவனித்த அவர்கள் எதிரே உள்ள பெட்டிக் கடையில் கூல்டிரிங் வாங்கி கொடுப்பது போன்று இருசக்கர வாகனத்தில் அருகே வந்து உள்ளனர்.

 

அப்போது இருசக்கர வாகனத்தில் பெட்டியை உடைத்து மஞ்ச பையில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை கொலை எடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து நகை கடையில் இருந்து வெளியே வந்த செல்வராஜ் தனது இருசக்கர வாகனத்தில் பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.


Leave a Reply