பப்ஜி விளையாடுவதை கண்டித்த தந்தையை கொடூரமாக கொலை செய்த சிறுவன்!

கர்நாடக மாநிலம் பெல்காமில் பப்ஜி விளையாட அனுமதி மறுத்த தந்தையை அவரது மகன் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்காமில் உள்ள சித்தீஸ்வரர் நகர் பகுதியில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சங்கர் தமது மகன் செல் போனில் பப்ஜி விளையாடுவதை கண்டித்துள்ளார். செல் போனை அவரிடமிருந்து பறித்துக்கொண்ட தந்தை இணையத்தை துண்டித்து உள்ளார்.

 

ஆத்திரமடைந்த சிறுவன் தனது தந்தை ஷங்கரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் வீட்டில் உள்ள மற்ற உறவினர்களளின் அறைகளையும் பூட்டி தந்தை சங்கரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த அவர் மீது மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply