ரூ.1200 கோடி செலவு இல்லை: ஆதவ் அர்ஜுனா
கட்சி தலைமையில் இருந்து எந்தவொரு அழுத்தமும் அதிகாரிகளுக்கு இருக்காது. தாம்பரத்தில் நடைபெற்ற விவகாரம் முதலமைச்சருக்கு தெரிந்த உடன், அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சட்டங்கள், வழிமுறைகள் என்ன கூறுகிறதோ, அதனை மட்டுமே பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதனை தான் முதல்வரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.
தலைமைச் செயலகம் கட்ட ஒரே கட்டமாக ரூ.1,200 கோடி செலவு செய்யப்போவது இல்லை. மக்களிடம் போலி பிரச்சாரத்தை உருவாக்குகின்றனர். தலைமைச் செயலகம் கட்டி முடிக்க 3-4 வருடம் ஆகும் என்றால், வருடத்திற்கு 300 கோடி ரூபாய் செலவு இருக்கும் என்று தான் கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 50 வருடத்தை நினைத்து தான், எதிர்கால திட்டமாக இதனை பார்க்க வேண்டும். – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
📱 Share on WhatsApp 𝕏 Share on X




