ஓடும் காரில் இருந்து கைக்குழந்தையை தவறி சாலையில் வீழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இது தெரியாமல் அக்குழந்தையின் பெற்றோர் ஊர் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் மூனார் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் தமிழ்நாட்டில் கோயில்களில் வழிபாடுகளை முடித்து விட்டு சொந்த ஊருக்கு காரில் திரும்பியுள்ளனர்.
மூணாறு அருகே சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்த ஒரு வயது குழந்தை தவறி கீழே விழுந்து விட்டது. பெரிய அளவில் காயம் ஏற்படாத நிலையில் அந்த குழந்தையை சாலையின் மறு முனைக்கு சென்றது. நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் வேறு வாகனங்கள் எதுவும் வராததால் அந்த பிஞ்சு குழந்தை தப்பியது. இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
இதனை பார்த்த வனத்துறையினர் அந்த பச்சிளம் குழந்தையை மீட்டு சிறு காயங்களுக்கு சிகிச்சை அளித்தன.ர் காரில் பயணித்தவர்கள் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டை அடைந்த பிறகுதான் குழந்தையை காணவில்லை என தேடியுள்ளனர். என்ன நடந்தது என தெரியாமல் அவர்கள் விழி பிதுங்கி நிற்க காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தை பெற்றோரிடம் சேர்க்கப்பட்டது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் காரில் இருந்து குழந்தை கீழே விழுந்தது கூட தெரியாமல் வீட்டிற்கு வந்து விட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர்.