சிறுவனை மர்மநபர்கள் வழிமறித்து செல் ஃபோன் திருட்டு!

சென்னை ராயபுரத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற சிறுவனை ஆட்டோவில் மர்ம நபர்கள் கடத்தி சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

 

அப்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து அவரைக் கீழே தள்ளி விட்டு தப்பித்து சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மற்றொருவர் மீது ஆட்டோ மோதி சென்றது.

 

இதனால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டியும், சிறுவனும் ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது 2 பேர் தப்பித்து சென்று நிலையில். மற்ற இருவரையும் மடக்கிப் பிடித்து பொதுமக்கள் உதவியுடன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Leave a Reply