சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி கடும் கண்டனம்!

சிதம்பரம் மீதான சிபிஐ நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்ப உறுப்பினர்களான ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அரசின் தோல்விகளை சிதம்பரம் தொடர்ந்து வெளிப்படுத்தியதால் அவர் வேட்டையாடப்படுவதாக குற்றம் சாட்டி இருக்கிறார். மாநிலங்களவை உறுப்பினர் நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் என நாட்டிற்கு விசுவாசத்துடன் பணியாற்றிய சிதம்பரம் எதற்கும் அச்சப்படாமல் உண்மையை பேசிவருகிறார் என்று பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

எனவே எந்த சூழலிலும் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி அரசு சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அதிகாரத்தை தவறாகவும், இரக்கமற்ற முறையிலும் அரசு பயன்படுத்துகிறது என்று கடுமையாக சாடியிருக்கிறார்.


Leave a Reply