பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்த தொலைக்காட்சியின் சட்டப் பிரிவு மேலாளர் பிரசாந்த் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்திக் கொண்ட காரணத்தால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியே அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதாவிற்கு ஏற்கனவே 11 லட்சத்து 50 ஆயிரம் அளிக்கப்பட்டதாகவும் மீதம் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் ரூபாய் வீதம் நாற்பத்தி இரண்டு நாட்களுக்கு பாக்கி தொகைதருவதாக கூறி இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நடிகை மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்க்கு தொடர்பு கொண்டு இரண்டு நாட்களில் பணம் வேண்டும் என்றும் ,இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுமிதா இரண்டு நாட்கள் பணம் தரவேண்டும் என தன் மிரட்டவில்லை என்றும்கூறினார் நிகழ்ச்சி விளம்பரத்திற்காகபுகார் அளிக்கப்பட்டது என தனக்கு தெரியவில்லை என்று மதுமிதா கூறினார்.