கோவையில் ஆணவ கொலைகளை தடுக்க தனி பிரிவு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆணவ கொலையை தடுக்கும் நோக்கில் 24 மணிநேரமும் கண்காணிக்கும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆணவக் கொலைகள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. இந்த ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினர் மத்தியில் வைக்கப்படுகிறது.

 

இதில், மேற்கு மண்டலமான உடுமலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு எல்லைக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் ஆணவப் படுகொலை நடைபெற்றது.

 

இந்த ஆணவ படுகொலையை அடுத்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், ஆணவ படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும், இதற்கான தனிப்பிரிவுகள் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்தனர்.

எஸ்.பி.சுஜித் குமார்
எஸ்.பி.சுஜித் குமார்

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் ஆணவக்கொலை தடுப்பு தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவை மாவட்ட சமூக நல அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் கலப்பு திருமணம் செய்தவர்களை மிரட்டுவது, துன்புறுத்துவது தொடர்பாக 24 மணி நேரமும் புகார்கள் கொடுக்கலாம்.

 

0422-2200777, 94981 01165, 94981 81212 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.மேலும்,இந்த தகவல்கள் அடங்கிய நோட்டீஸ்கள் மற்றும் விளம்பர பதாகைகள் கோவை மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply