திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2 சார்பாக இன்று 27.07.19 கல்லூரி வளாகத்தில் உள்ள கலாம் கனவு பூங்கா வில் கலாம் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடை பெற்றது.
இந்த நிகழ்வினை மாவட்ட செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் விநாயக மூர்த்தி துவக்கி வைத்தார்.
மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கலாம் அவர்கள், இன்றைய இளைஞர்கள் அவர் கண்ட கனவனை நனவாக்க முயற்சிக்க வேண்டும், இந்த நினைவு நாளன்று மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்த வேண்டும். தங்களை முழுமையாக சேவையில் அற்பணிக்க வேண்டும் என்று கூறினார். பிறகு அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் 25 மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் கல்லூரி அருகே உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று ஜல் சக்தி அபியான் திட்டத்தை அனைவரும் செயல்படுத்த முன்வரவேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
எதிர்கால இந்தியாவாகிய நாங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம், மழை நீரை சேமிப்போம், வளமான பாரதத்தை உருவாக்குவோம் போன்ற உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இறுதியாக மாணவ செயலர் சந்தோஷ் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை கல்லூரி பொறுப்பு முதல்வர் புஷ்பலதா ஏற்பாடு செய்திருந்தார்.