கட்டுமானம் மற்றும் அதன் தேவைகள் குறித்த கையேடு வெளியீடு

கட்டுமானம் மற்றும் அதன் தேவைகள் குறித்த கையேடு வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் வெளியிடப்பட உள்ளதாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவிப்பு.கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.இச்சங்கத்தின் தலைவர் உதயகுமார் மற்றும் செயலாளர் சந்திரபிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் கடந்த 1995ம் ஆண்டு துவங்கப்பட்டதாகவும் இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவையொட்டி நாளை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இந்த விழா கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்.

 

இந்த விழாவின் போது கட்டுமானம் மற்றும் அதன் தேவைகள் மற்றும் சங்க செயல்பாடுகள் குறித்த கையேட்டை நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட உள்ளதாக தெரிவித்தனர்.மேலும், இந்நிகழ்ச்சியில் நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன்,ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் சந்திரசேகர்,மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண் குமார்,துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி மற்றும் விஜய் டிவி நீயா நானா புகழ் கோபிநாத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலசங்க செயலாளர் சந்திர பிரகாஷ் பேசும் போது இருநூற்றி ஐம்பது மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் உள்ளதாகவும் வருடந்தோறும் 1200 கோடி ரூபாய் வரை டெண்டர் பணிகள் மேற்கொள்ளபடுவதாக தெரிவித்தார்.

மேலும்,அவர் கூறுகையில் தற்போது ஆன்லைன் மூலமே டெண்டர்கள் பெறபடுவதாகவும் பெரிய அளவில் டெண்டர்கள் பெறும்போது நிதி வழங்கபடுவது சற்று காலதாமதமாவதாக தெரிவித்தார்.தற்போது கட்டுமான தொழில்களுக்கு எம்.ஸாண்ட் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளதாக கூறியவர் பொதுபணித்துறை மூலம் தர சான்றிதழ்கள் அளிக்கபட்ட பின்னரே கட்டுமான பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்தார்.இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது பொருளாளர் அம்மாசையப்பன்,துணை தலைவர் ராஜகோபால்,துணை செயலாளர் மைக்கேல்,துணை பொருளாளர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


Leave a Reply