பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் 80–வது பிறந்தநாளையொட்டி, முத்து விழா இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே சந்தை திடலில் நேற்று இரவு முத்து விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சை.அக்கிம் மாவட்ட செயலாளர் (கி) தலைமை தாங்கினார். தளபதி ராஜ்குமார் மாநில துணை பொதுச் செயலாளர், மாஸ்டர் ஆனந்தன் சமூக ஊடக பேரவை மாநில செயலாளர், தங்கராஜ் மாவட்ட செயலாளர் (மே) அறிவழகன் மாநில துணைத் தலைவர், ஜீவா மாவட்ட தலைவர் (கி) அ.அம்ஜத்கான் மாவட்ட அமைப்பு செயலாளர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர்கள் அனைவரும்:–அங்கீகாரம் இல்லாத தலைவர் தமிழகத்தில், ஏன் இந்திய அளவிலேயே ஒரு சுயம்பு என்றால் அது டாக்டர் ராமதாஸ் தான். மற்ற அரசியல் கட்சிகள் போல பா.ம.க. அல்ல. இப்போதுள்ள அரசியல் கட்சிகளில் வழிநடத்துபவர்கள் மட்டுமே தலைவர்களாக இருக்கின்றனர். ஆனால், மாபெரும் ஒரு கட்சியை நிறுவி நடத்தி வரும் ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ். கட்சி தவிர 27 இயக்கங்களையும் நடத்தி வருகிறார்.
எத்தனை சாதனைகள் செய்தாலும் மக்களுக்காக அரும்பாடுபட்டு உழைத்தாலும் இன்று வரை ஒரு அங்கீகாரம் இல்லாத தலைவராகவே டாக்டர் ராமதாஸ் இருக்கிறார். வறட்சி வரும், வெள்ளம் வரும், அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என்று 20, 30 வருடங்களுக்கு முன்பே அவர் தொண்டை கிழிய கத்தினார். ஆனாலும், மக்கள் அவரை எண்ணிப் பார்க்கவில்லை.வாழும் காலத்திலேயே. இடஒதுக்கீடு பெற்றுத்தந்து மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்.
சட்டசபை, நாடாளுமன்றத்தில் என் கால் படாது என்று சத்தியம் செய்து, அந்த கொள்கை முடிவில் உறுதியாக இருக்கிறார். ஆனாலும் தமிழக மக்கள் அவருக்கு அங்கீகாரம் தரவில்லை. பா.ம.க.வின் லட்சியம் தமிழகத்தின் முன்னேற்றம் தான். அதற்காகத்தான் போராடுகிறோம், போராடி கொண்டிருக்கிறோம்.இன்னும் 10, 20 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அவரைப் பற்றி நீங்கள் (மக்கள்) தெரிந்துகொள்வீர்கள். இல்லை என்றால், இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஏமாந்திருப்பார்களா?. எனவே, இப்போதும் சொல்கிறேன்.
பெரியார் போன்ற தலைவர்களை வாழும் காலத்தில் ஏளனம் செய்தார்கள், அவமானப்படுத்தினார்கள். ஆனால், அந்த மாபெரும் தலைவர்கள் இறந்த பின்பு அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். இந்த முறை அதை செய்யாதீர்கள். வாழும் காலத்திலேயே டாக்டர் ராமதாசுக்கு அங்கீகாரம் கொடுங்கள்.பா.ம.க.வின் லட்சியம் 10 ஆண்டுகளுக்கு பிறகு பேசி எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை. இதை ஆணவத்தில் சொல்லவில்லை, அனுபவத்தில் பேசுகிறேன்.
கிராமத்தில் இப்போது வேலைவாய்ப்புகள் இல்லை. முறையான வசதிகள் இல்லை. அதற்காக நகர மயமாக்கலை நினைத்து நாங்கள் பெருமைப்பட போவதும் இல்லை. எங்களது நோக்கம், மக்கள் நகரத்தில் இருந்து மீண்டும் கிராமங்களுக்கே செல்ல வேண்டும். அதுதான் பா.ம.க.வின் லட்சியம்.பா.ம.க.வுக்கு நீங்கள் அங்கீகாரம் தாருங்கள். நாங்கள் ஆளும் கூட்டணியில் இருந்தாலும், இல்லை என்றாலும், கொள்கை அடிப்படையிலும், மக்களுக்கு எதிரான திட்டங்களிலும் சமரசம் செய்து கொள்ளப்படாது என்று அனைவரும் பேசினார்.