அமெரிக்காவின் வேளாண் பொருளான சோயாபீன்ஸ் இறக்குமதியை குறைத்த சீனா

அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் நீடிப்பதால் வேளாண் பொருளான சோயா பீன்ஸ் ஏற்றுமதியில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்கா கடும் சரிவை சந்தித்து உள்ளது. அமெரிக்கா, சீனா இடையே இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் வர்த்தகம் வரியை உயர்த்தி வருவதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நீடித்து வருகிறது.

 

கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிகப்பெரிய சோயா பீன்ஸ் ஏற்றுமதி வாடிக்கையாளராக சீனா இருந்த போது சோயா பீன்ஸ் ஏற்றுமதி இரு மடங்கு அதிகரித்தது. இதனால், அமெரிக்க விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து வந்தனர்.ஆனால் அண்மைக்காலமாக இரு நாடுகளுக்கு இடையே நீடிக்கும் வர்த்தக பிரச்சனையால் சீனா, அமெரிக்காவிடமிருந்து சோயாபீன்ஸ் இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்து உள்ளது.

 

அமெரிக்காவின் இந்த பேரிழப்பை ஈடுகட்ட பிரேசில் நாடு முயற்சித்தும், சோயாபீன்ஸ் ஏற்றுமதியில் அமெரிக்கா கடும் பின்னடைவை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு அமெரிக்கா அரசு வழங்கும் விளைபொருட்களுக்கான மானியம் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.


Leave a Reply