சிவசங்கரன் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு

ஏர்சல் முன்னாள் தலைவர் சிவசங்கரனுக்கு சொந்தமான சிவா இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் 563 கோடி மோசடிக்கு எதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் ஐடி்‌பி‌ஐ வங்கி வழக்கு தொடர்ந்து உள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஐடி்‌பி‌ஐ வங்கி துபாய் சர்வதேச நீதிமன்றம் மூலம் சிவசங்கரனுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 563 கோடி ரூபாய் கடனாக அளித்துள்ளது. இந்த நிறுவனம் இங்கிலாந்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கடனை வட்டியுடன் சேர்த்து 597 கோடி ரூபாயாக திருப்பி செலுத்தும்படி கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி லண்டன் உயர்நீதிமன்றத்தின் வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

ஆனால் இதுவரை சிவசங்கரனுக்கு சொந்தமான நிறுவனமோ வங்கி கடனை திருப்பி செலுத்தாதை அடுத்து ஐடிப‌பி‌ஐ வங்கி சிவசங்கர நிறுவனத்திற்கு எதிராக தனியாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. இந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வந்த போது சிவசங்கரன் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராக இல்லை. இதனிடையே சிவசங்கர் நிறுவனத்தை திவாலன் நிறுவனமாக அறிவிக்கக்கோரிய தேசிய நிறுவனங்கள் நடுவர் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் ஐடிச‌பி‌ஐ வங்கி புகார் அளித்து உள்ளது.


Leave a Reply