சேலம் அரசுப் பள்ளியில் மாணவி பலாத்காரம்..! தலைமறைவான ஆசிரியர்

சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.இங்கு உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பாலாஜி.வேதியியல் பாடத்திற்கும் இவர் தான் ஆசிரியர் என்பதால் மாணவிகளை அடிக்கடி ஆய்வுக்கூடத்திற்கு அழைத்து செல்வதை வழக்கம் ஆக்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் கர்ப்பம் ஆனதாக கூறப்படுகிறது. ஆய்வுக் கூடத்தில் வைத்து ஆசிரியர் பாலாஜி தன்னை பலாத்காரம் செய்து விட்டதாகவும், தொடர்ந்து மிரட்டி பாலியல் அத்துமீறளில் ஈடுபட்டதாகவும் பெற்றோரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து கொண்டலம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பள்ளி ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பெண் காவல் ஆய்வாளர் புஷ்பராணி என்பவர் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்று தருவதாகவும், பள்ளி ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டும், அந்த கருவை கலைக்க செய்யும்படி மிரட்டியும் உள்ளார். ஏழை குடும்பம் என்பதாலும், காவல் ஆய்வாளரின் மிரட்டலுக்கு அஞ்சியும் பாலாஜி மீதான புகாரை பெற்றோர் வாபஸ் பெற்றனர்.

 

இந்த நிலையில் அந்த மாணவிக்கு நேர்ந்தது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நடக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அங்கு படித்த மாணவி ஒருவர் தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து மாணவி பலாத்கார வழக்கில் ஆசிரியரை காப்பாற்ற காவல் துறையினர் கட்டப் பஞ்சாயத்து நடத்தி வருவது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. அரசு பள்ளி ஆய்வகத்தில் நடந்த இந்த பலாத்கார கொடுமையால் மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக உயர் காவல் அதிகரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து உயர் காவல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கொண்டலம்பட்டி காவல் துறையினர் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி தலைமறைவானது தெரிய வந்தது. மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.காமுக ஆசிரியர் மீது பாலியல் பலாத்காரம், போக்சோ உள்ளிட்ட 3 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.


Leave a Reply