அரசு குடியிருப்புகளில் அங்கீகாரம் இன்றி தங்கி இருப்பவர்களை வெளியேற்றுவது எளிமைப்படுத்தப்படும்

அரசு குடியிருப்புகளில் அங்கீகாரம் இன்றி தங்கி இருப்பவர்களை வெளியேற்ற வகைசெய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு குடியிருப்புகளில் அங்கீகாரம் இன்றி தங்கி இருப்பவர்களை வெளியேற்ற நோட்டீஸ் அனுப்புதல், காரண விளக்கம், விசாரணை உள்ளிட்ட நீண்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் , தகுதி உடையவர்களுக்கு குடியிருப்புகள் கிடைக்க தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

 

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொது வளாகங்கள் தொடர்பான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 17 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் அறிமுகம் செய்யபட உள்ள மசோதா நிறைவேற்றப்பட்டால் அரசுகுடியிருப்புகளில் அங்கீகாரம் இன்றி தங்கி இருப்பவர்களை வெளியேற்றுவது எளிமைப்படுத்தப்படும்.


Leave a Reply