பாஜக பிரதிநிதிகள் சிலர் தேசிய கீதத்திற்கு இடையே வந்தே மாதரத்தை பாடும் வீடியோ

இந்தூரில் மாநகராட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் மேயர் உள்ளிட்ட பாஜக பிரதிநிதிகள் சிலர் தேசிய கீதத்திற்கு இடையே வந்தே மாதரத்தை பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தூர் மாநகராட்சியில் அண்மையில் பட்ஜட் கூட்டத்தொடர் நடைபெற்றது.

 

இதில் மேயர் மாலினி உள்ளிட்ட பாஜக பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்த நிலையில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பிரதிநிதிகள் தேசிய கீதத்தை பாடுவதை நிறுத்திவிட்டு வந்தேமாதரம் பாடலை பாடினார். இந்த காட்சி வலைத்தளங்களில் பரவி பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்தூர் மாநகராட்சியின் எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் வாய் தவறி தேசிய கீதத்திற்கு இடையே வந்தேமாதரம் பாடபட்டதாக விளக்கம் அளித்துள்ள இந்தூர் மாநகராட்சி தலைவர் , இதனை எதிர்க்கட்சிகள் பெரிதாக்க வேண்டாம் எனவும் கேட்டு கொண்டிருக்கிறார்.


Leave a Reply