--- --:--:-- --

வெளியே போ : தாராபுரத்தில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவுக்கு கடும் எதிர்ப்பு

23

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளராகப் போட்டியிடும் சத்யபாமா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக வருகை தந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த தொகுதி மக்கள் மற்றும் வாக்காளர்கள் சிலர், திடீரென அவருக்கு எதிராகத் திரண்டு சரமாரியான கேள்விகளை எழுப்பி கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 

 

இதனைத் தொடர்ந்து, “சத்யபாமா ஒழிக.. துரோகி வெளியே போ..” என்ற கோஷங்களை எழுப்பி அவர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் அதிருப்தி காரணமாக தனது தேர்தல் பரப்புரையைத் பாதியிலேயே ரத்து செய்த வேட்பாளர் சத்யபாமா, அங்கிருந்து பாதியில் திரும்பிச் சென்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon