உடனுக்குடன் மக்கள் பிரச்சனையை தீர்க்கும் திருப்பூர் வருவாய் அதிகாரி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உடனுக்குடன் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வரும் மாவட்ட வருவாய் அதிகாரி பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது.

 

மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் பல்லடம் சுற்று வட்டார பகுதி மக்கள் தங்களது குறைகளை தெரிவித்து வருகின்றனர். பொது மக்களிடம் சுகுமார் மனுக்களை வாங்கியவுடனே சம்பந்தப்பட்ட துறையினரோடு செல் ஃபோன் மூலம் தொடர்புகொண்டு குறைகளுக்கு தீர்வு காண்கிறார். பிரச்சனையை உடனுக்குடன் தீர்த்து வைத்த சுகுமாருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Leave a Reply