--- --:--:-- --

தொழிலதிபர் வீரமணி பாலியல் வழக்கை தீவிரப்படுத்துக!

1

கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது என கடந்த வாரம் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசித்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த மீண்டும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. தொழிலதிபர் வீரமணி மீது பல சிறுமிகள் தாமாக முன்வந்து பாலியல் புகார் கூறியுள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

 

 

பிரபல கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி (85) சம்பந்தப்பட்ட போக்சோ (POCSO) வழக்கில், 2003-ம் ஆண்டுக்கும் முன்பிருந்தே பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon