நீட்டில் பாஸ் ஆனாலும் பலனில்லை! மாணவர்களின் நிலை

இந்தியாவில் மருத்துவம் படிக்க நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஆனால் அது மட்டும் போதுமா
2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் 39.56 சதவீதம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த முறை தேர்ச்சி விகிதம் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 48.57 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து இருபத்து மூன்றாயிரத்து எழுபத்து எட்டு மாணவர்கள் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதியுள்ளனர்.

 

இதில் ஐம்பத்து ஒன்பதாயிரத்து எழுநூற்று எண்பத்து ஆறு பேர் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தேர்ச்சி அடைந்த அனைவருக்கும் தமிழக அரசு மருத்துவ சீட்டுகள் கிடைக்காது என்பது தான் உண்மை. ஒட்டு மொத்தமாக தமிழகத்திலுள்ள 3,250 அரசு மருத்துவமனை மருத்துவ சீட்டுகளில் மற்ற மாநிலத்தவருக்கு 15% சீட்டுகள் போக மீதமுள்ள 2700 சீட்டுகள் மட்டுமே தமிழக மாணவர்களுக்கு கொடுக்கப்படும்.

 

இந்த 2700 சீட்டுகளை நிரப்பவே 59,786 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். நீட் தேர்வில் மொத்த மதிப்பெண் 720 க்கு வெறும் 134 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றுவிட்டான் என்பது சொல்வது சரியா? இந்த தேர்ச்சி முறையை அடிப்படையாக வைத்து தமிழகம் நீட்டில் முன்னேறி இருக்கிறது என்று சொல்வது நியாமா? நீட் தேர்வில் பாஸ் ஆவது பயனளிக்காது. ரான்க் லிஸ்டில் இடம் பிடித்தால் தான் மருத்துவ சீட் கிடைக்கும் என்பதை மாணவர்கள் உணர்வர்.


Leave a Reply