ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரஜினிகாந்த் புகைப்படம்!

Publish by: --- Photo :


புதிதாக மாற்றியமைக்கப்பட்ட தமிழக அரசின் ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படமும்  அவர் குறித்த செய்தியும் வெளியாகியுள்ளது. இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல், நிர்வாகம், கலை, விளையாட்டுதுறைகளில் சாதித்தவர்கள் பற்றிய தகவல்கள் தமிழக பள்ளி மானவர்களின் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.

 

அந்த வகையில் வாழ்க்கையில் ஏழ்மை நிலையிலிருந்து தனது கடின முயற்சியால் உயர்ந்தவர்கள் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. ஒரு பாடத்தில், பேருந்து நடத்துனராக இருந்து திரைதுறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராகவும், கலாச்சார அடையாளமாகவும் ரஜினிகாந்த் திகழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள ரஜினி ரசிகர்கள் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றன.


Leave a Reply