--- --:--:-- --

மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

3

ட்டிமன்ற நடுவராக பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றவர் சாலமன் பாப்பையா, சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்களால் மக்களின் பேரன்பைப் பெற்றார். எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், பதிப்பாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவராக சாலமன் பாப்பையா திகழ்ந்தார். மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

 

எனினும், சிகிச்சை பலனின்றி தனது 91-ஆவது வயதில் சாலமன் பாப்பையா காலமானார். தமிழ்ப்புலமையால் உலகத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த சாலமன் பாப்பையாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அஞ்சலிக்காக மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள இல்லத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் வைக்கப்பட்டது. இதற்கிடையே, சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழறிஞர்கள் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழறிஞர் அய்யா சாலமன் பாப்பையா அவர்களுக்கு அரசு மரியாதை” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

இந்நிலையில், மறைந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. மின் மயானத்தில் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரும் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். இதையடுத்து, மதுரை தத்தனேரியில் உள்ள மின் மயானத்தில் காவல் துறையின் கவுரவ மரியாதையுடன் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon