தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,577ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. கொசு ஒழிப்பு பணியில் 25,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




