பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் வேண்டாம்
சென்னையின் நெரிசல் மிகுந்த பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அங்கு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் இருக்கும் என்றும், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாந்தோம் சாலையில், சமாளிக்கவே முடியாத அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், சென்னை மாநகர எல்லைக்கு வெளியே ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதே இதற்கு நிரந்தர மற்றும் ஒரே தீர்வு எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




