டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு வரும் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முக்கியமான தேர்வு குரூப் 4 என்று சொல்லலாம். கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் 6000 காலியிடங்களுக்கு கிட்டதட்ட 17 லட்சம் பேரிலிருந்து 20 லட்சம் பேர் வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

 

இப்பொழுது அந்த குரூப் 4க்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன் படி வரும் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இருக்கும் என்றும், செப்டெம்பர் மாதம் 1 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் முதற்கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

 

விரைவாக காலியிடம் எவ்வளவு உள்ளது என்பது பற்றியும் , அதற்கான தகுதிகள் பற்றியும்,அதை பற்றிய விவரங்கள் பற்றியும் விரிவான அறிவிப்பு 14 ஆம் தேதியே வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது.தேர்வர்கள் முன் கூட்டியே தயார் செய்துகொள்ளும் விதமாக தேர்வு தேதியும், விண்ணப்ப தேதியும் மட்டும் இப்போது டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு உள்ளது.


Leave a Reply