சேலத்தில் 441 கோடி மதிப்பில் ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

Publish by: செய்திப் பிரிவு --- Photo :


சேலத்தில் 320 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேம்பாலம் கட்டுவதற்க்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கினார். குறிப்பாக ஐந்து ரோடு பகுதியை மையமாக கொண்டு பல்வேறு சாலைகளுக்கு மேம்பாலம் கட்டுவதற்க்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டுமான பணிகள் தொடங்கியது.

தற்போது ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதி நிறைவுபெற்றுள்ளது. பிரபல தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் என இந்த பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை இருப்பதால் ,இங்கு எப்போதும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும். அதற்க்கு இப்போது தீர்வு கொடுக்கும் விதமாக இப்போது ஈரடுக்கு மேம்பாலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

இதனுடைய மதிப்பு 320 கோடியில் தொடங்கி 441 கோடியில் கட்டப்பட்டது. ஏ. வி. ஆர். ரௌண்டான பகுதியிலிருந்து ராமகிரிஷ்ணா சாலை வரை 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு முதல் தள பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த பாலத்தை தான் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார். இது மட்டுமில்லாமல் ஐந்து ரோட்டிலிருந்து புதிய பேருந்து நிலையம், நான்கு ரோடு, அண்ணா பூங்கா வரையிலான ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்ட ஜெயலலிதாவினால் அடிக்கல் நாட்டப்பட்டு ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. அதை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். பின்னர், அவர் அந்த மேம்பாலத்தில் பேருந்தில் பயணித்தார். சேலம் மாநகரின் நுழைவுவாயாகவே இந்த ஐந்து ரோடு கருதப்படுகிறது. விமான நிலையத்திற்கு செல்பவர்கள் மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்பவர்கள் என எங்கு சென்றாலும் இந்த ஐந்து ரோடு பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.

 

இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் குறித்த நேரத்தில் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் இப்போது இந்த மேம்பாலம் எளிமையாக சிரமம் இல்லாமல் செல்ல உதவும் என்பதால் இது சேலம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.