நீலகிரி மாவட்டத்தில் 4 பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும்! பெற்றோர்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் உதகை அருகே நான்கு பள்ளிக்கூடங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். உதகை தாலுகா பகுதியில் உள்ள தங்காடு அரசு நடுநிலைப்பள்ளி ,ஓரநெல்லி ஆரம்பப்பள்ளி, கெத்தை அரசு ஆரம்பப்பள்ளி, காந்திபுரம் ஆரம்பப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிக்கூடங்களையும் மூடுவதற்க்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

தங்காடு அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் டி.ஓரநெல்லி ஆரம்ப பள்ளி ஆகிய பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் அருகே உள்ள கண்ணோரி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். கெத்தை அரசு ஆரம்பப்பள்ளி மாணவர்கள் கீல்குந்தா பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பல கிலோமீட்டர் தூரம் பயணம் சென்று புதிய பள்ளிகூடத்திற்க்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கெத்தை பள்ளியிலிருந்து கீல்குந்தா பள்ளிக்கு மாற்றப்பட்ட மாணவர்கள் 50 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

மேலும் மாணவர்கள் பயணம் செய்யும் வழியில் வனவிலங்குகள் அச்சுறுத்தல் இருப்பதால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். தங்களின் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் நான்கு பள்ளிக்கூடங்களை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Leave a Reply