7 பேர் விடுதலை குறித்து பேச திமுக-விற்கு தகுதிஇல்லை: முதல்வர் எடப்பாடி தாக்கு…

சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மேம்பாலம் கட்ட முன்னாள் முதல்வர் ஜெ.அடிக்கல் நாட்டி திட்டத்தை துவக்கி வைத்தார்.சேலத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளின் ஒரு பகுதியினை தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைக்க உள்ளார்.அதனை முன்னிட்டு நேற்றிரவே சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது,அவர் தமிழகத்திலே பருவ மழை பொய்த்த காரணத்தால் பல மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் பொருட்டு தேர்தலுக்கு முன்பே அமைச்சர்கள்,உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வறட்சி ஏற்படுகின்ற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்,அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்தது.மேலும்,குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளில் அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் எந்தெந்த பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்படுகிறதோ அப்பகுதிகளில் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லையே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் விவசாயிகளுக்காக பாடுபடுகின்ற அரசு தங்களது அரசு என்றும்,நமக்கு ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய நீரை திறந்துவிட வாரியத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் சாகுபடிக்கு தேவையான நீரை கர்நாடக அரசு கொடுக்கும் என எதிர்பார்ப்பதாக முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேலும்,கர்நாடகாவில் ஆள்வது காங்கிரஸ் ஆட்சி.அதனால் காங்கிரஸ்,திமுக எம்.பிக்கள் நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசி கண்டிப்பாக நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றுத்தருவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

மேலும்,40 சதவிகிதமாக இருந்த அதிமுக வாக்கு வங்கி 18 சதவிகிதமாக குறைந்திருப்பது குறித்து பேசிய முதல்வர் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு இருந்தால் அதிக வாக்கு கிடைக்கும்.கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக எஞ்சிய தொகுதியில் போட்டியிட்டதனால் வாக்குகள் குறைந்திருக்கின்றன ஒழிய குறையவில்லை.

 

எதிர்க்கட்சியினர் மாதம் 6 ஆயிரம் வழங்கப்படும் உள்ளிட்ட நடைமுறைப்படுத்த முடியாத திட்டங்களை அறிவித்து பச்சைப்பொய்யை மக்களிடம் எடுத்துச்சொல்லி மக்களின் மன நிலையை மாற்றி,ஏமாற்றி வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். இப்படி பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி,பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு அதன் மூலமாகவே வாக்குகளை பெற்றிருக்கிறார்களே தவிர உண்மையான வெற்றி அல்ல.

 

மேலும்,பேரறிஞர் அண்ணா,எம்.ஜி.ஆர்,ஜெ. அவர்களின் வழியில் நடைபெறும் தங்களது அரசு இரு மொழிக்கொள்கையை தான் பின்பற்றும்.ஆனால்,எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்காக தான் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தை திரித்து அரசியல் ஆதாயம் இப்படிப்பட்ட செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.அதற்காக வருந்துவதாகவும் பேசினார்.

 

மேலும்,7 பேர் விடுதலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் 7 பேர் விடுதலை குறித்து மாநில அரசு முடிவு செய்ய முடியாது.மாநில அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநரிடம் கொடுத்து விட்டதாக பேசிய அவர் இதுகுறித்து பேச திமுக-விற்கு தகுதியில்லை எனவும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் நளினியை மட்டும் விடுதலை செய்ய வேண்டும். மற்றவர்களை தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

 

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது.அந்த ஒரு முடிவை எடுத்து விட்டு வெளியில் வந்து விடுதலை செய்ய வேண்டும் என்கிறார்கள்.அவர்களுடைய காலத்தில் ஏன் செய்யவில்லை?ஏன் அந்த முடிவை எடுத்தார்கள்?திமுக தலைவர் அமைச்சரவை கூட்டத்தில் விடுதலை செய்யக்கூடாது தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட்ட பிறகு இவர்கள் கேட்க என்ன உரிமை இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.தங்களை பொறுத்தவரை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற வகையிலே தான் இந்த அரசு செயல்படும் என்று பேசினார்.அந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.

மேலும்,அமமுக-வில் இருந்து வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் அமமுக-வில் இருந்து விலகி பல பேர் தங்களுடைய தாய் கழகத்தில் இணைந்துள்ளனர்.பெரும்பாலானவர்கள் விரைவில் வந்து சேர்வார்கள்.அதற்கு தேவையான அழைப்பை ஓ.பி.எஸ் மற்றும் தானும் அறிக்கை வாயிலாக வெளியிட்டு இருக்கிறோம்.அவர்களும் விரைவில் வந்து தாய்க்கழகத்தில் இணைந்து கழகப்பணியாற்றுவார்கள் என்றும் பேசினார்.

 

சந்திப்பின் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.


Leave a Reply